Post Office Monthly Income Scheme (POMIS) என்பது மாதந்தோறும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்களுக்கு பயன்படும் ஒரு அரசு ஆதரவு சிறுசேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் தற்போது 7.4% வட்டி ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. வட்டி மாதந்தோறும் செலுத்தப்படுகிறது
Post Office POMIS என்றால் என்ன?
POMIS என்பதன் விரிவாக்கம் Post Office Monthly Income Scheme, இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை Post Office-ல் முதலீடு செய்தால், அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் வருமானமாக கிடைக்கும். உதாரணமாக, ₹9 லட்சம் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் மாதத்திற்கு சுமார் ₹5,550 வட்டி கிடைக்கும்.
POMIS Scheme-ன் முக்கிய அம்சங்கள்:
- 7.4% ஆண்டு வட்டி தற்போது வழங்கப்படுகிறது, வட்டி ஆண்டின் முடிவில் மட்டும் கிடைக்காமல், மாதந்தோறும் பெறும் வகையில் உள்ளது.
- 5 வருட முதலீட்டு காலம், POMIS கணக்கின் maturity period 5 ஆண்டுகள். அதாவது, முதலீடு செய்த தொகையை திட்டத்தின் காலம் முடியும் வரை வைத்திருக்கலாம்.
- மாதாந்திர வருமானம், இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு monthly income. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டியை உங்கள் Post Office Savings Account-க்கு பெறும் வசதியும் உள்ளது
யார் POMIS கணக்கு தொடங்கலாம்?
- 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கணக்கு தொடங்கலாம்.
- Single Account தொடங்கலாம்.
- Joint Account தொடங்கலாம்.
- Joint Account-ல் அதிகபட்சம் 3 adults இருக்கலாம்.
- இந்திய குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- NRI-கள் POMIS கணக்கு தொடங்க முடியாது.
POMIS Account தொடங்க என்ன Documents தேவை?
- Aadhaar Card
- PAN Card
- Passport Size Photograph
- தேவையான KYC ஆவணங்கள்
- Post Office-ல் KYC process முடித்த பிறகு POMIS account தொடங்கலாம்.
எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம்?
- Single Account அதிகபட்சமாக ₹9,00,000 வரை முதலீடு செய்யலாம்.
- Joint Account அதிகபட்சமாக ₹15,00,000 வரை முதலீடு செய்யலாம். இந்த maximum limits 2023-ல் ₹9 லட்சம் மற்றும் ₹15 லட்சமாக உயர்த்தப்பட்டன.
முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு?
7.4% ஆண்டு வட்டி அடிப்படையில் சில உதாரணங்கள்:
| முதலீடு | மாதம் வட்டி |
|---|---|
| முதலீடு | மாதம் வட்டி |
| ₹1,00,000 | ₹617 |
| ₹5,00,000 | ₹3,083 |
| ₹9,00,000 | ₹5,550 |
| ₹15,00,000 | ₹9,250 |
POMIS-ல் கிடைக்கும் வட்டியை எப்படி பயன்படுத்தலாம்?
- வீட்டு செலவுகளுக்கு
- மாதாந்திர bills-க்கு
- பெற்றோரின் செலவுகளுக்கு
- regular income தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
POMIS-ல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்:
POMIS என்பது 5 வருட maturity scheme, அதனால், இந்த பணம் உடனடியாக தேவைப்படக்கூடிய emergency fund ஆக முழுமையாக பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பணத் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
POMIS Premature Closure – 1 முதல் 5 வருடத்திற்குள் பணம் எடுத்தால்?
- POMIS கணக்கை உடனடியாக close செய்ய முடியாது
- 1 வருடம் முடிந்த பிறகே premature closure செய்ய முடியும்.
1 வருடம் முடிந்து 3 வருடத்திற்குள் Deposit amount-ல் 2% deduction செய்யப்படும்.
3 வருடம் முடிந்த பிறகு Deposit amount-ல் 1% deduction செய்யப்படும்.
EXAMPLES:
நீங்கள் ₹5,00,000 முதலீடு செய்ததாக வைத்துக்கொள்வோம், 3 ஆண்டுகளுக்கு பிறகு premature closure செய்தால்.
₹5,00,000 × 1% = ₹5,000
எனவே applicable deduction-க்கு பிறகு சுமார் ₹4,95,000 கிடைக்கும்.
Premature closure செய்யும்போது applicable rules மற்றும் deduction-ஐ Post Office-ல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
POMIS-ன் Drawbacks:
POMIS நல்ல monthly-income option என்றாலும், சில limitations உள்ளன.
- பணம் 5 வருட காலத்திற்கு திட்டத்தில் இருக்கும்.
- Emergency fund-க்கு முழுமையாக பொருத்தமானது அல்ல 1 வருடத்திற்கு முன்பு account close செய்ய முடியாததால், உடனடி தேவைக்கான பணத்தை முழுவதும் இதில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல
- 1 வருடத்திற்குப் பிறகு account close செய்தாலும் applicable deduction இருக்கும்.
- Interest rate future-ல் மாறலாம் ( Small Savings scheme interest rates அரசு மூலம் காலாண்டு அடிப்படையில் review செய்யப்படுகின்றன. எனவே, தற்போதைய 7.4% வட்டி விகிதம் எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கும் என்று உறுதி செய்ய முடியாது ).
POMIS யாருக்கு ஏற்றது?
- மாதந்தோறும் ஒரு நிலையான interest income தேவைப்படுபவர்களுக்கு POMIS ஒரு option ஆக இருக்கலாம்.
- பெரிய தொகையை relatively conservative savings option-ல் வைத்திருக்க விரும்புபவர்கள்
- எனவே, உங்கள் பணத் தேவைகள், liquidity requirement மற்றும் 5 வருட காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது முக்கியம்.
Disclaimer : Interest rates மற்றும் scheme rules அரசு மாற்றங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் சமீபத்திய விதிமுறைகளை Post Office/India Post மூலம் சரிபார்க்கவும்.

₹5,000 முதல் ₹50,000 வரை வட்டி இல்லா கடன் தரும் அரசாங்கம்







Leave a Reply